வவுனியா புதுக்குளம் வீதியில் விபத்து!!(படங்கள்)

808

இன்று (03.11.2015) காலை புதுக்குளம் வீதி சாஸ்திரிகூழாம்குளம் பகுதியில் மாட்டுடன் மோதிய வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியது.

வேகமாக பயணித்த வாகனம் சந்தி ஒன்றில் திரும்ப முற்பட்டபோது வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் சென்ற மாடு ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இவ் விபத்தில் வாகனம் தலைகீழாக கவிழ்ந்ததால் சேதமடைந்ததுடன் இவ் விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

-R.துசாந்-

4 5 6 7 8