கொழும்பில் மாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.!(படங்கள்)

467

கடந்த வியாழக்கிழமை கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக உயர்தேசிய கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின்போது நடாத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து வவுனியா உயர் தொழிநுட்பவியல் மாணவர்கள் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் கல்லூரி வளாகத்திற்குள் தமது எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.

மேற்படி சம்பவத்துக்கு  கடும் எதிர்ப்பினை தெரிவித்த மாணவர்கள்,  ஜனநாயக நாட்டு அரசே  மாணவர்களை தண்டிப்பதுதான் நல்லாட்சியா? உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமாவை பட்டபடிப்புக்குரிய  சமத்துவத்தை கொடு! போன்ற சுலோகங்களை தாங்கியிருந்தனர்.

1 2 3 4 5