கடந்த ஒன்பது மாதங்களில் இணையத்தளம் தொடர்பில் 2000 முறைப்பாடுகள்!!

1151

FB

இவ்வாண்டின் கடந்த 9 மாதங்களில் இணையத்தளம் தொடர்பிலான 2000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றத்தின், பிரதான தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொசான் சந்திரகுத்தா தெரிவித்துள்ளார்.

இவற்றில் 80 சதவீதமானவை போலியான முகநூல் பக்கங்கள் தொடர்பானது எனக் கூறியுள்ளார். இந்த நிலையில் புகைப்படங்களை முகநூலில் தரவேற்றும் போது, தெரிந்த நண்பர்களுடன் மாத்திரம் பகிர்ந்து கொள்ளுமாறும், இதுவே பாதுகாப்பான நடைமுறை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீப காலங்களில் இலங்கையில் அதிகளவான முறைப்பாடுகள் முகநூல் ஊடாகவே பதியப்பட்டு வருகின்றது. குறிப்பாக பெண்கள், இவ்விடயத்தில் சற்று அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.