உடலுக்கு வெளிப்புறத்தில் இதயத்தை கொண்டுள்ள சிறுமி!!

337

ad_186333934ரஷ்­யாவைச் சேர்ந்த 6 வய­தான ஒரு சிறு­மியின் இதயம் உடலின் வெளிப்­பு­றத்தில் உள்­ளது. வீர்­ச­வியா பொருன் கொன்­சா­ரோவா எனும் இச்­சி­றுமி, இதயம் வெளிப்­பு­ற­மாக இருந்த நிலையில் பிறந்த போதிலும் உற்­சா­க­மா­ன­வ­ளாக காணப்­ப­டு­கிறாள். நடன ஆற்றல் மூலமும் அவள் பலரை கவர்ந்­துள்ளாள். 10 இலட்சம் பேரில் ஒருவர் இவ்­வா­றான இத­யத்­துடன் பிறக்­கக்­கூடும் எனக் கூறப்­ப­டு­கி­றது.

ரஷ்­யா­வி­லுள்ள பல வைத்­தி­ய­சா­லைகள் இச்­சி­று­மிக்கு சத்­தி­ர­சி­கிச்சை செய்து இத­யத்தை உரிய இடத்தில் வைப்­ப­தற்கு தயக்கம் தெரி­வித்­துள்­ளன. இச்­சத்தி­ர­சி­கிச்சை மிக ஆபத்­தா­னது என்­பதே இதற்குக் காரணம். இந்­நி­லையில், இச்­சி­று­மியை அமெ­ரிக்­கா­வுக்கு அழைத்துச் சென்று சிகிச்­சை­ய­ளிப்­ப­தற்கு இச்­சி­று­மியின் தாயா­ரான தாரி போருன் தீர்மா­னித்­துள்ளார். “எனது தாயார் எனது இத­யத்தை அடிக்­கடி தொடுவார். ஏனெனில் அவர் அதை மிகவும் விரும்­பு­கிறார். “நான் பாட­சா­லைக்கோ பாலே நடன வகுப்புக்கோ செல்லவில்லை. ஆனால், இவற்றை வீட்டிலேயே செய்கிறேன்” என்கிறார் இச்சிறுமி.