செயற்கை கால்கள் பொருத்தப்பட்ட வாத்து!!

717

masala_2388280fதென் ஆபிரிக்காவில் வசிக்கிறார் சூ பர்கர். இவர் விலங்குகள், பறவைகள் மீது மிகுந்த அன்பு செலுத்தக்கூடியவர். இவரிடம் இருந்த ஓஸ்ஸி என்ற வாத்துக்கு ஒரு கால் உடைந்துவிட்டது. வாத்து நடக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டது. தன்னுடைய வாத்துக்குச் செயற்கைக் கால் பொருத்தக்கூடியவர்கள் யாராவது இருந்தால் தொடர்புகொள்ளுங்கள் என்று ரேடியோவில் விளம்பரம் கொடுத்தார் சூ.

நிறையப் பேர் உதவ முன்வந்தனர். இறுதியில் பிரமாதமான செயற்கைக் கால் ஒன்று தயார் செய்து வாத்தின் காலில் பொருத்திவிட்டனர். இரண்டு கால்களால் சதோஷமாக நடக்கிறது ஓஸ்ஸி.