2015ம் ஆண்டின் செழுமைமிக்க நாடுகளில் இலங்கை 61வது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன் தெற்காசியாவில் முதலிடத்தை பிடித்துள்ளது. லண்டனை தலைமையகமாகக் கொண்ட நிறுவனம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
நாடுகளின் மக்கள், அவர்களின் வருவாய் என்பவற்றுடன் பொருளாதாரம், கைத்தொழில் வாய்ப்புக்கள், நிர்வாகம், கல்வி, சுகாதாரம், காப்பு மற்றும் பாதுகாப்பு, தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் சமூக முதலீடு என்பவற்றின் தரவுகளை கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
142 நாடுகளில் இந்த தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் கடந்த வருடம் இலங்கை 62வது இடத்தையும், 2013ம் ஆண்டு 60வது இடத்தையும் 2012ம் ஆண்டு 58வது இடத்தையும் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்தப் பட்டியலில் முதலிடம் நோர்வேக்கும் இரண்டாம் இடம் சுவிஸர்லாந்துக்கும் கிட்டியுள்ளன.
அத்துடன் அண்டை நாடுகளான இந்தியா 99வது இடத்திலும், பாகிஸ்தான் 130வது இடத்திலும் ஆப்கானிஸ்தான் 140வது இடத்திலும் உள்ளன.





