29 தினங்களேயான ஆண் சிசுவொன்றை விற்பனை செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் இரு பெண்கள் மற்றும் ஆணொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வாழைச்சேனை – பளைநகர் பகுதியில் வைத்து இவர்கள் கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் குறித்த சிசுவின் தாய், அதனை வாங்க முற்பட்ட பெண் மற்றும் தரகர் ஒருவருமே எனத் தெரியவந்துள்ளது. மேலும் இதன் நிமித்தம் சிசுவின் தாய்க்கு 20,000 ரூபாய் பணம் தரகர் மூலம் வழங்கப்பட்டுள்ளது.சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.




