உயர்தேசிய கணக்கியல் டிப்ளோமா பாடநெறிக்கு பல்கலைக்கழக பட்டப்படிப்பிற்கு இணையான அந்தஸ்து!!

479

82799_img0887

உயர் தேசிய கணக்­கியல் டிப்­ளோமா பாட­நெ­றிக்கு பல்­க­லைக்­க­ழக பட்­டப்­ப­டிப்­புக்கு இணை­யான அந்­தஸ்­தினை வழங்க அர­சாங்கம் தீர்­மா­னித்­திருக்கின்றது என்று சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான லக்ஷ்மன் கிரி­யெல்ல நேற்று அறி­வித்தார்.

இம் மாண­வர்கள் முன்­னெ­டுத்த ஆர்ப்­பாட்­டத்தின் பின்­ன­ணியில் அர­சியல் தூண்­டுதல் இருப்­ப­தா­கவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.உயர் தேசிய கணக்­கியல் டிப்­ளோமா பாட­நெறி மாண­வர்கள் மீது பொலி­ஸார் முன்­னெ­டுத்த தாக்­குதல் நட­வ­டிக்கை தொடர்பில் விவாதம் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்­றது.

இதற்கு பதி­ல­ளித்த போதே சபை முத ல்வர் லக்ஷ்மன் கிரி­யெல்ல மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் தனது உரையில்,

1990 ஆம் ஆண்டு 46/90 இன் கீழ் சுற்று நிரு­பத்­தி­னூ­டாக உயர் தேசிய கணக்­கியல் டிப்­ளோமா பாட­நெ­றிக்கு பல்­க­லைக்­க­ழக பட்­டப்­ப­டிப்­புக்­கான அந்­தஸ்து வழங்­கப்­பட்­டது. ஆனால், கடந்த மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சியில் 2013 ஆம் ஆண்டு இந்த சுற்­று­நி­ருபம் இரத்து செய்­யப்­பட்­டது.

இப் பாட­நெ­றிக்கு பட்­டப்­ப­டிப்பு அந்­தஸ்து வழங்கக் கோரியே கடந்த 29 ஆம் திகதி அம் மாண­வர்கள் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். ஆனால் 46/90 ஆம் இலக்க சுற்றுநிரூ­பத்தை மீண்டும் அமுல்­ப­டுத்­தவும் அதனை பலப்­ப­டுத்­து­வ­தற்கும் அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.

இவ்­வா­றான தீர்­மானம் எடுக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யி­லேயே மாண­வர்கள் ஆர்ப் ­பாட்­டத்தை நடத்­தி­யுள்­ளனர். இவ் ஆர்ப்­பா ட்­டத்தை ஏற்­பாடு செய்­ததன் பின்­ன­ணியில் அர­சியல் தூண்­டுதல்கள் உள்­ள­தெ­னவும் சந்­தே­கிக்­கின்றோம்.

இல­வசக் கல்­வியை இந் நாட்­டுக்கு அறி­மு­கப்­ப­டுத்­திய ஐ.தே.கட்சி தொடர்ந்தும் அதனை முன்­னெ­டு த்து செல்லும். அத­ன­ டிப்­ப­டையில் நாம் எதிர்­வரும் வரவு செலவு திட்­டத்தில் கல்­விக்­கான ஒதுக்­கீட்டை நான்கு மடங்­காக அதி­க­ரிக்­க­வுள்ளோம்.

மாண­வர்­களின் கோரிக்­கை­களை பூர்த்தி செய்­வதில் எமக்கு எவ்­விதப் பிரச்­சி­னையும் இல்லை. சிவில் சட்­டத்தை மீறாமல் பேச்சுவார்த்­தை­க­ளுக்கு வரு­வ­தற்கு மாண­வர்கள் தயா­ரென்றால் அவர்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்த நானும் பிரதமரும் தயாராகவே உள்ளோம்.அதைவிடுத்து அரசாங்கத்தை அச்சுறுத்தி சிவில் சட்டங்களை மீறி மாணவர்கள் அவ ர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க முடியாது என்றும் அமைச்சர் கிரியெல்ல தெரிவித்தார்.