பிரபல நடிகையை மணக்கும் யுவராஜ்!!

521

Indian-cricketer-Yuvraj-Singh-in-Mumbai-for-a-promotional-even

ரெய்னா, ஹர்பஜன் சிங்கை அடுத்து யுவராஜ் சிங்கும் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 33 வயதான யுவராஜ் சிங், இங்கிலாந்தை பூர்வீகமாக கொண்ட நடிகை மற்றும் மாடல் அழகி ஹேஷல் கீச்சை வரும் பெப்ரவரி மாதம் திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாக இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே யுவராஜும் ஹேசல் கீச்சும் நெருக்கமாக பழகி வந்தனர். சமீபத்தில் நடைபெற்ற ஹர்பஜன் சிங் வரவேற்பில் யுவராஜ்-ஹேசல் கீச் ஜோடியாக வந்தது பலரின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.