ஆண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு!!

360

How-to-get-a-fair-skinஉடல் ஆரோக்­கி­யத்­துடன் இருக்க வேண்­டு­மானால், சரி­யான உண­வு­களை உட்­கொண்டு, தினமும் உடற் ­ப­யிற்சி செய்து வந்தால் போதும் என்று நினைப்பது தவறு.

அன்­றாடம் நாம் மேற்­கொள்ளும் பழக்­க­வ­ழக்­கங்­க­ளையும் கவ­னிக்க வேண்டும். குறிப்­பாக ஆண்­களின் உடல்­நலம் தான் வேக­மாக பாதிக்­கப்­ப­டு­கி­றது. இவற்றலிருந்து விடுபட என்ன செய்யலாம் என பார்ப்போம்.

அன்­றாடம் கண்­களை மூடிக் கொண்டு 10–-20 நிமிடம் தியானம் செய்து வந்தால், மனம் ஒரு­நி­லைப்­ப­டுத்­தப்­பட்டு, தேவை­யில்­லாத கவ­லைகள் அகலும். மேலும் தியானம் மன அழுத்தம் குறைய, நல்ல தூக்கம் கிடைக்க, இரத்த அழுத்தம் குறைய, நோயெ­திர்ப்பு சக்தி அதி­க­ரிக்க, இதய செயற்­பாடு மேம்­பட உதவும்.

ஆண்கள் க்ரீன் டீயை தொடர்ச்­சி­யாக குடித்து வந்தால், ஞாபக சக்தி அதி­கரிக்கும். இரத்த அழுத்தம் குறையும், வாய் துர்­நாற்றம் தடுக்­கப்­படும், நோயெ­திர்ப்பு சக்தி அதி­க­ரிக்கும்நார்ச்­சத்­துள்ள உண­வுகள் நாள் முழு­வதும் சுறு­சு­றுப்­புடன் சீராக செயல்­பட நார்ச்­சத்து நிறைந்த டயட்டைப் பின்­பற்ற வேண்­டி­யது அவ­சியம்.

வெது வெதுப்பான ஜூஸ் காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்தால், உடலில் தேங்கியுள்ள டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

உடலிலேயே சருமம் தான் மிகப்பெரிய உறுப்பு. எனவே சருமத்தை ஒவ்வொரு நாளும் பராமரிக்க வேண்டும். அதுவும் வெளியே செல்லும் முன் வெயிலில் இருந்து பாதுகாப்பு கிடைக்க சன் ஸ்க்ரீன் தடவுவது, சருமம் வறட்சியடையாமல் இருக்க மாய்ஸ்சுரைசர் தடவுவது, கடலை மாவு அல்லது பாசிப்பருப்பு மாவு ஆகியவற்றைப் பயன்படுத்தி குளிப்பது என்று செய்து வந்தால், சரும பிரச்சினைகள் வருவதைத் தவிர்க்கலாம்.