
இலங்கை பணிப்பெண் ஒருவர் டுபாய் நாட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்கொலை செய்து கொண்ட பெண் அந்நாட்டில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இராகமை பகுதியை சேர்ந்த 51 வயதுடைய இருபிள்ளைகளின் தாயே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இவர் 3 மாதங்களுக்கு முன் மருதானையில் உள்ள வெளிநாட்டு வேளைவாய்பு முகவர் நிலையம் ஒன்றின் ஊடாக டுபாய் நாட்டிற்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.





