ஐ. நா அமைதிகாப்பு பணியில் ஈடுபட்ட 7 இலங்கை படையினர் பலி!!

615

Flag_of_the_United_Nations.svgஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காப்பு பணிகளுக்காக சென்ற இலங்கை படையினரில் இதுவரை ஏழுபேர் உயிர் நீத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெப் அமைப்பின் சிறுவர் நல அதிகாரி கே.ரவீந்திரன் தெரிவித்தார்.

இன்று காலை மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் தினவிழாவில் கலந்து கொண்டு பேசும்போதே இதனை தெரிவித்தார்.
ஐ.நா.அமைதி காப்பு சமாதான பணிகளில் 1200 இலங்கை படையினர் ஈடுபட்டுள்ளனர். தற்போது ஹெயிட்டி, தென்சூடான், மத்திய ஆபிரிக்கா ஆகிய நாடுகளில் அமைதிகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.