வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் வருகைதரு,பகுதிநேர போதனாசிரியர் வெற்றிடங்கள்!!

1118

vacancy

வவுனியா தொழில்நுட்பகல்லூரியில்; வருகை தரு  மற்றும் பகுதிநேர போதனாசிரியர்; பதவிகளுக்கான விண்ணப்பங்கள் தொழில்நுட்பக் கல்லூரி வவுனியாவினால் கோரப்படுகின்றது.

சேவையின் தன்மை: தற்காலிகமானது. திருப்திகரமற்ற சேவை என இனங்காணப்படும் போது முன்னறிவித்தல் இன்றி இடைநிறுத்தப்படும். ஒரு வருடம் சேவைக்காலத்தை கொண்டது. ஒரு வருடத்தின் பின் மீண்டும் புதுப்பிக்கக்கூடிய வாய்ப்புடையது.

சம்பளம் :மணித்தியாலத்திற்கு 600 ரூபா முதல் 1000ரூபா வரை பெற்றுக் கொள்ளமுடியும். அனைத்து துறைகளிலிருந்தும் போதனாசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

மேலும்A/C Mechanic),electronic, electrical wiring,auto mobile   போன்ற கற்கைநெறிகளுக்கு அதிகளவிலான விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.

 தகமை :விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள் NVQ LEVEL 5 அல்லது NDT அல்லது NCT அல்லது குறித்த துறையில் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.

அனுபவம்: இத்துறையில் கற்பித்தல் அனுபவம் அல்லது தொழில் அனுபவம் கருத்தில் கொள்ளப்படும்.

குறிப்பு: 15.11.2015 ம்; திகதிக்கு முன்பதாக விண்ணப்பங்களை அதிபர், தொழில்நுட்பக்கல்லூரி, மன்னார் வீதி, நெளுக்குளம், வவுனியா எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். விண்ணப்பப் படிவங்களை வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் பெற்றுக் கொள்ளலாம்.

 தொடர்புகளுக்கு  024 222 3664, 024 222 6720, 024 2050177