வவுனியாவில் திருப்புகழ் இன்னிசை கச்சேரி நிகழ்வும் பெரியோரை கௌரவித்தலும்!!(படங்கள்)

907

வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கம் கந்தசஸ்டியை முன்னிட்டு திருப்புகழ் இன்னிசைக் கச்சேரி ஒன்றை நேற்று சனிக்கிழமை நடத்தியது.

திருப்புகழ் இன்னிசை நிகழ்ச்சியை இசைக்குயில் திருமதி வதனி சிறிதரன் மற்றும் சென்னையை சேர்ந்த கலாநிதி வி.சுதர்சன் ஆகியோரின் மாணவன், நயினை ப.சிவமைந்தன் வழங்கியிருந்தார்.

இதன் போது 75 வயதை கடந்தவர்களுக்கு விசேட கௌரவமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் விசேடமாக வவுனியாவில் 105 வயதைக் கடந்திருக்கும் வே.சதாசிவம் ஐயா விழாவில் கலந்து கொண்ட அனைவராலும் கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக சமூக சஞ்சீவி சி.ஏ.ராமசுவாமி, தமிழ் மணி அகளங்கன், மற்றும் இசை ஆர்வலர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

11216807_1682194388661948_4542249971497375_n 12115689_1682194255328628_2226022304627759343_n 12187865_1682160068665380_4068657365931832942_n 12189946_1682194628661924_2669061032962384208_n 12191536_1682194665328587_6005351574198954037_n 12191542_1682194455328608_7970283507532121287_n 12193763_1682160208665366_6785616380196122084_n 12196010_1682194495328604_1382346758909441996_n 12196125_1682160125332041_6179593508525039404_n