
வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் கத்தி முனையில் துணிகர திருட்டுச் சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, பூவரசங்குளம், செட்டிகுளம் வீதியில் உள்ள வீடு ஒன்றினுள் புகுந்த திருடர்கள் முகத்தை மறைத்தவாறு, கையில் கத்தியுடன் வீட்டில் இருந்தவர்களை மிரட்டிவிட்டு அவர்களிடம் இருந்த பணம் மற்றும் அணிந்திருந்த சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, அண்மைக்காலமாக வவுனியாவில் இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





