குளிர்பான விரும்பிகளுக்கு காத்திருக்கும் பேராபத்து!!

335

Softdrink

நெஞ்சு படபடப்பு ஏற்பட்டாலோ, சோர்வு ஏற்பட்டாலோ குளிர்பானம் அருந்துவது வழக்கம். ஆனால் அவர்கள் அருந்தும் குளிர்பானங்களால் இருதய நோய் ஏற்படும் என்று ஆய்வு ஒன்று கூறுகின்றது.

சுவீடன் நாட்டில் இது தொடர்பாக மருத்துவ குழு ஆய்வு நடத்தியது. 12 ஆண்டுகளாக தொடர்ந்து தினமும் குளிர்பானம் அருந்தும் 42,000 பேரை அவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தினர்.

அவர்களுடைய இருதய செயற்பாடுகள் பரிசோதிக்கப்பட்டபோது, அதில் பெரும்பாலானோருக்கு இருதயம் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் சோடா மற்றும் வாயு நிரப்பப்பட்ட குளிர்பானம் அருந்தினால் இருதய நோய் தாக்கும் என கண்டறிந்துள்ளனர்.

இவற்றை அருந்துவதால் 23% இருதய பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக மருத்துவ ஆய்வு தெரிவித்துள்ளது.