கௌசிகன் தொடர்பான வதந்தி : வன்மையாக கண்டிக்கும் வவுனியா இளைஞர்களும் மக்களும்!!

1438

Kowsikan

வவுனியாவின் பிரபல வர்த்தகா் கௌசிகன் எனும் நபர் பற்றி கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக ஒருசில இணைய பக்கங்களில் அவர் மது அருந்துவதாகவும் தப்பான செயல்களில் ஈடுபடுவதாகவும் , அரசியல் கட்சிகளுடன் கூட்டு சேர்வதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

இந்த செய்தியை பற்றி நாங்கள் அவரிடம் பிரத்தியேக நேர்காணல் ஒன்று மேற்கொண்டோம், அப்போது அவர் கூறியதாவது..

நான் சுதந்திரமாக நானும் எனது வேலையும் என்று இருக்கிறேன். நான் மது அருந்துவதாக கூறியிருந்தார்கள், இதுவரையில் புகை பிடிப்பதோ மது அருந்துவதோ இல்லை .

பாலியல் செய்திகளுடன் என்ன தொடர்பு படுத்தி இருந்தார்கள், இது எனக்கு மிகுந்த மன அழுத்தத்தை தருகின்றது. அரசியல் கட்சிகளுடன் ஒப்பிட்டு கூறியிருந்தார்கள் ,எனக்கும் அரசியலுக்கும் எந்தவிதமான தொடர்புகளும் இல்லை, அரசியல்வாதிகளை நம்பி நான் வாழவும் இல்லை.

இப்படி அவதூறான வேலைகளை செய்து எனது பெயரை கெடுக்க யார் செய்த சதி என்று தெரியவில்லை. என்னை பற்றி எனது கிராம மக்களிடமும் ,எனது நண்பர்களிடமும் கேட்டால் சொல்வார்கள். நான் அப்படிப்பட்ட கேவலமான செயல்களில் ஈடுபடுபவன் இல்லை.

எனக்கு எதிரிகளோ விரோதமோ எதுவும் இல்லை , இப்படி எனக்கு அவதூறு விளைவித்த அனைத்து இணையதளங்களையும் வன்மையாக கண்டிக்கிறேன். மற்றும் நலன் கருதி நேர்காணல் மேற்கொண்ட கதிரவன் செய்திகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

அதுமட்டுமல்லாது வவுனியா வாழ் இளைஞர்களும்
வர்த்தக சமூகத்தினரும் வன்மையாக கண்டித்துள்ளனர்.

-நன்றி கதிரவன்-