சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன தனது அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.
தனது இராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். எனினும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் தெடர்ந்தும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
எவன்-கார்ட் சர்சையில் அமைச்சரின் பெயரும் கசிந்துள்ளதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளர். இன்று காலை அவரின் வீட்டில் இடம்பெற்ற விஷேட ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.