தந்தையுடன் இறுதிப் பயணம் சென்ற 06 வயது சிறுமி!!

464

Accidnt

பாணந்துறை பழைய காலி வீதியில், பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கர வண்டி பயணித்த பாதையிலேயே மீண்டும் வண்டியை திருப்புவதற்கு முற்பட்ட வேளை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனால் முச்சக்கர வண்டியினுள் இருந்த சிறுமி பதையில் தூக்கி வீசப்பட்டு காயமடைந்ததாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் படுகாயமடைந்த சிறுமி லுனாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கலுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

மொரட்டுவை, தினபொலவத்தை பிரதேசத்தில் வசிக்கக்கூடிய 06 வயது சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

முச்சக்கர வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டிருப்பதுடன், அவர் உயிரிழந்த சிறுமியின் தந்தை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவை பொலிஸார் மேற்கொள்கின்றனர்.