வடக்கு – கிழக்கில் மோசமான காலநிலை : மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!!

635

Wind

நாட்டின் வடக்கு, கிழக்குக் கடல் பகுதிகளில் கடும் கடல் கொந்தளிப்பு அபாயம் நீடிப்பதனால் மீனவர்களை கடலுக்குச் செல்லவேண்டாம் என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்குத் திசையில் 300 கிலோமீற்றருக்கு அப்பால் மணிக்கு 300 கிலோமீற்றர் வேகத்தில் தாழமுக்கம் மையங்கொண்டுள்ளது.

இதனால் கடும் காற்று வீசுவதுடன் மிகக் கடல் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படுகின்றது.

அத்துடன் வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களிலும் வடக்கு கிழக்கு கடல் பிராந்தியங்களிலும் இடையிடையே மழை காணப்படும் எனவும் பிற்பகல் வேளையில் நாட்டின் அனேகமான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை காணப்படும் சந்தர்ப்பங்களில் காற்று பலமானதாக வீசும் எனவும் பொதுமக்கள் இந்த இடிமின்னல்
தாக்கத்திலிருந்து ஏற்படும் சேதங்களைக் குறைத்துக்கொள்ளும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.