மன்னார் நகர் பகுதியில் கழுதைகளின் நடமாட்டம் அதிகரிப்பு : மக்கள் விசனம்!!

567

மன்னாரில் கழுதைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளளோடு, மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் கழுதைகள் வேகமாக ஓடித்திரிவதினால் விபத்துக்கள் ஏற்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் அதிகமான கழுதைகள் காணப்படுகின்றது. குறித்த கழுதைகள் மன்னார் நகர் பகுதியில் ஒன்றோடு ஒன்று சண்டை பிடிப்பதோடு அதி வேகமாக ஓடுகின்றது.

குறித்த கழுதைகளின் தாக்குதல்களுக்கு பாதசாரிகள் உள்ளாகுவதோடு, விபத்துக்களும் ஏற்படுகின்றது.

மன்னாரில் உள்ள கழுதைகளை பராமரிப்பது தொடர்பாக மன்னாரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று வெளிநாட்டு பணத்தை பெற்று நிகழ்ச்சித்திட்டத்தை நடை முறைப்படுத்தி வருகின்ற போதும், உரிய முறையில் கழுதைகள் பராமரிக்கப்படுவதில்லை என மன்னார் மக்களும் சமூக ஆர்வலர்களும் விசனம் தெரிவித்துள்ளனர்.

தற்போது மன்னார் பகுதியில் பல நூற்றுக்கணக்கான கழுதைகள் காணப்படுகின்றன. எனவே குறித்த கழுதைகளை பராமரிக்க உரிய அதிகாரிகள் முன் வர வேண்டும் எனவும் குறிப்பாக கதைகளின் தாக்குதல்களில் இருந்து மக்களை பாதுகாக்க அதிகாரிகளும், மன்னார் நகர சபையும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 2 3 4