
இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு – 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 டெஸ்ட் போட்டிகளிலும் 3 ஒருநாள் போட்டிகளிலும் 2 இருபதுக்கு 20 போட்டிகளிலும் பங்கேற்று விளையாடி வருகின்றது.
இரு அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என கைப்பற்றிய நிலையில், மூன்று போட்டிகளைக்கொண்ட ஒருநாள் தொடரையும் இலங்கை அணி 3-0 எனக் கைப்பற்றி வெள்ளையடிப்பு செய்துள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 2 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு – 20 தொடரின் முதலாவது போட்டி இன்று பல்லேகலயில் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறவிருந்த 2 ஆவது இருபதுக்கு – 20 போட்டி, மாதுலுவாவே சோபிததேரரின் இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ள நிலையில், அன்றைய தினத்தை தேசிய துக்கதினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளதால் 11 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





