இம்முறையும் தீபாவளி கொண்டாட்டம் வவுனியாவில் சூடு பிடித்துள்ள நிலையில் வவுனியா நகரம் முழுவதும் வியாபார நிலையங்களும் நடைபாதை வியாபாரிகள் மற்றும் தென்னிலங்கை வர்த்தகர்களுமாக களை கட்டியுள்ளது .கொள்வனவுகளை மேற்கொள்ள மக்கள் கூட்டம் முண்டியடித்து செல்வதை காணக்கூடியதாக உள்ளது .
மேலும் வவுனியா கடை வீதி தர்மலிங்கம் வீதி இலுப்பையடி மற்றும் குருமன்காடு மன்னர் வீதி பிரதேசங்கள் எங்கிலும் மக்கள் கூட்டம் தீபாவளி கொள்வனவு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் .
இன்று காலநிலையும் சீராக காணப்படுவதால் பொதுமக்களும் வியாபாரிகளும் தமது கொள்வனவு விற்பனை நடவடிக்கைகளை மழையின் பயமின்றி மேற்கொண்டு வருகின்றனர் .
-அலுவலக செய்தியாளர் –






