காதல் வயப்பட்ட ஓரினச் சேர்க்கை நண்பரை கத்தியால் குத்தி கொன்று தானும் விசமருந்திய இளைஞர்!!

694

Murder

காதல் விவகாரம் ஒன்றினால் இருவருக்கிடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இளைஞர் ஒருவர் மற்றொரு இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

ஓரினச்சேர்க்கை நண்பர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தானும் விஷமருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இளைஞர் தற்போது தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

நேற்றிரவு இருவரும் ஹபரனை 5ம் கட்டையில் கற்பாறை ஒன்றில் மது அருந்துவதற்காக சென்றுள்ளனர். பின்னர் தனது நண்பரை கத்தியால் குத்தி கொன்று விட்டு தானும் விஷமருந்தியுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் சுற்றுலா விடுதி ஒன்றில் பணியாற்றும் ஹபரனை, ஜயசேனகம பிரதேசத்தில் வசிக்கக்கூடிய 23 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் சில நாட்களுக்கு முன்னர் யுவதி ஒருவரை காதலிக்க ஆரம்பித்துள்ளதனால் மனவேதனையடைந்த நண்பர் இவரை கொலை செய்துள்ளார்.

விஷமருந்திய இளைஞர் இன்று காலை வீட்டிற்கு தொலை பேசி மூலம் அழைப்பை ஏற்படுத்தி, நண்பரை கொலை செய்து விட்டு தானும் விஷமருந்தி கற்பாறையில் விழுந்து கிடப்பதாக தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசமருந்திய நபரை வைத்தியசாலையில் அனுமதித்ததுள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஹபரனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.