ஆட்டமிழந்ததை ஏற்க முடியாமல் காரித்துப்பியபடி வெளியேறிய கொஹ்லி!!

363

kohli

ஆட்டமிழந்தார் என்று நடுவர்கள் அறிவித்ததால் கோபமடைந்த இந்திய அணியின் அணித்தலைவர் வீராட் கோஹ்லி காரி உமிழ்ந்தபடி மைதானத்தை விட்டு வெளியேறினார்.

இந்தியா சிம்பாப்வே இடையிலான 2வது ஒரு நாள் போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் வீராட் கோஹ்லி அவுட் செய்யப்பட்ட விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தான் அதிருப்தியை வெளிப்படுத்தியபடி வெளியேறினார் கோஹ்லி.

இந்தியாவின் துடுப்பாட்டத்தின் போது 7வது ஓவரை கைல் ஜார்விஸ் வீசினார். அதில் 2வது பந்தை தூக்கி அடித்தார் கோஹ்லி. பந்து மிட்ஒனில் போனது. அதை மால்கம் வாலர் டைவ் அடித்துப் பிடித்தார். ஆனால் தான் ஆட்டமிழந்ததை ஏற்கவில்லை கோஹ்லி.

இதையடுத்து 3வது நடுவரான ருஸ்ஸல் டிபினின் முடிவுக்கு விட்டார் கள நடுவரான அஸ்திரேலியாவின் ப்ரூஸ் ஆக்ஸன்போர்ட்.
இதையடுத்து டிவி ரீப்ளேக்களை 3வது நடுவர் டிபின் திரும்பத் திரும்பப் பார்த்தார். ஆனால் முடிவை அறிவிக்க முடியாமல் தடுமாறினார்.

இதனால் கோஹ்லி அதிர்ச்சி அடைந்தார். மறுபடியும் மைதானத்தை விட்டு வெளியேறாமல் நின்று கொண்டிருந்தார். மேலும் இது ஆட்டமிழப்பா, இல்லையா என்ற முடிவு கள நடுவரிடமே விடப்பட்டது.
இதையடுத்து கள நடுவர் ஆக்ஸன்போர்டிடம் பேசினார் கோஹ்லி. அவரோ அவுட்தான் என்று கூறி விட்டார்.

இதனால் கடும் அதிருப்தியடைந்த கோஹ்லி, கோபத்துடனும், அதிருப்தியுடனும் வெளியேறினார். போகும் போது காரித் துப்பியபடி அவர் போனதால் சலசலப்பும் ஏற்பட்டது.

கோஹ்லியின் செயல் தவறு என்று வர்ணிக்கப்படுகிறது. இதனால் இன்றைய போட்டியின் முடிவில் போட்டி நடுவர் கிறிஸ் பிராட், கோஹ்லிக்கு அபராதம் அல்லது தடை போன்ற ஏதாவது தண்டனை விதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் கிறிஸ் பிராடின் மகன் ஸ்டூவர்ட் பிராடும் கூட இப்படித்தான் கோபத்தைக் காட்டியிருந்தார். ஆசஷ் தொடரின்போது பிராட் அடித்த பந்தை அவுஸ்திரேலிய களத்தடுப்பாளர் பிடித்தார்.
அது பிடியா இல்லையா என்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் பிராட் மைதானத்தை விட்டு போகாமல் அடம் பிடித்தபடி நின்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.