இரண்டாவது T20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஆறுதல் வெற்றி!!

454

WI

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 23 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக சார்ள்ஸ 34 ஓட்டங்களையும், தினேஷ் ராம்டின் 34 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் லசித் மலிங்க 16 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களையும், மிலிந்த 17 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களையும் கைப்பற்றினர்.

163 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 10 விக்கட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பாக தில்ஷான் 52 ஓட்டங்களையும்,ஷேஹன் ஜெயசூரிய 30 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இதன்படி இரு அணிகளுக்குமிடையிலான இருபதுக்கு இருபது தொடரில் 1-1 என்ற அடிப்படையில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.

நேற்றைய போட்டியின் சிறப்பாட்டக்காரராக பிராவோவும் தொடரின் சிறபாட்டக்காரராக டில்ஷானும் தெரிவுசெய்யப்பட்டனர்.