நகரும் குளிர்சாதனப் பெட்டி !!

515

r2-d2-mini-fridge-300x168-300x168நீண்ட காலமாகவே அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நகரும் குளிர்சாதனப் பெட்டி தற்போது அறிமுகமாகியுள்ளது. தற்போது இதை பற்றிய முன்னோட்டக் காட்சியினை ஜப்பானியர்கள் அறிமுகபடுத்தியிருந்தனர். இந்த நகரும் குளிர்சாதனப் பெட்டி ஒரு வேலைக்காரனைப் போல உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் குளிர்பானங்களை வழங்கும் ஒரு இயந்திர மனிதனாக செயல்படுகிறது. இதனால் நமக்கு தேவைப்படும் நேரத்தில் குளிர்சாதனப் பெட்டி இருக்கும் இடத்தை தேடி நாம் போக வேண்டிய அவசியமில்லை. இந்த சிறிய குளிர்சாதனப் பெட்டியே நம்மைத் தேடி வந்து நமக்குத் தேவையானவற்றை அளிக்க வல்லது.

நகரும் தலையும் அதிநவீன பிளாஸ் லைட்டுகளையும் கொண்ட இந்த சிறு குளிர் சாதனப் பெட்டியில் நீங்கள் உங்களுக்கு பிடித்த தின்பண்டங்களையும் குளிர்பதனங்களையும் நிரப்பிக் கொள்ளலாம்.இதனால் உடல்நிலை சரியில்லாதவர்கள் அல்லது வயதானவர்களுக்கு ஒரு உதவியாக இருக்க கூடும்.இதில் சிறிய அளவுடன் கூடிய பொருள்கள் மட்டுமே வைக்க முடியும் என்பது ஒரு குறையாக இருந்தாலும் சாதாரண குளிர்சாதனப் பெட்டியி இல்லாத ஒரு உதவியாளனை இதில் காணலாம் என்ற நம்பிக்கையில் இதனை வாங்கலாம். இது உங்கள் வீட்டை அழகுபடுத்தும் ஒன்றாக அமையும்.

r2d2_7.0-300×169குளிர்சாதனப் பெட்டியின் ஒவ்வொறு பகுதியிலும் ஆறு கேன்களையும் தொலையியக்கியுடன் கூடிய வசதிகளையும் செய்து தருகிறது. மேலும் 2 மணி நேர மின்கலன் சேமிப்பில் ஒரு முழு அறையையும் தொடர்ந்து வலம் வரும் திறன் கொண்டது.இதனை ஹேர் ஏசியா நிறுவனத்தினர் தயாரித்துள்ளனர்.இந்த R2-D2 வின் நகரும் குளிர்சாதனப் பெட்டியை வாங்குவதற்கு ஜப்பானுக்கு சென்றால் மட்டுமே முடியும் . இதன் முன் உத்தரவுகளை¥ 998000 செலுத்தி அதாவது $8274 டொலர்களை செலுத்தி பெறலாம்.