அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி வடமாகாணசபை உறுப்பினர் ம.தியாகராசா முதலமைச்சருக்கு கடிதம்!!

544

Capture

வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசாஆகிய நான் நேற்று (11.11.2015) காலை பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், வைத்தியகலாநிதி சி.சிவமோகன், வடமாகாணசபை உறுப்பினரான M.P.நடராஜா ஆகியோருடன் அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று அங்குள்ள அரசியல் கைதிகளைப் பார்வையிட்டோம்.

அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருந்த போதிலும் அவர்களுடன் கலந்துரையாடியபோது பல கோரிக்கைகளை எங்களிடம் விடுத்தார்கள். வடமாகாணசபை உறுப்பினர் என்ற வகையில் எங்கள் ஊடாக வடமாகாண சபை முதலமைச்சர் அவர்கட்கு ஓர் செய்தியையும் எங்களிடம் கூறினார்கள்.

வடமாகாணசபை முதலமைச்சர் நீதியரசர் விக்கினேஸ்வரன் அவர்கள் தமது தலைமையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வடகிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றுகூட்டி அவர் தலைமையில் ஓர் கூட்டத்தை ஒழுங்குசெய்து சிறையில் வாடுகின்ற ஒட்டுமொத்த அரசியல் கைதிகளையும் நிபந்தனையற்ற முறையில் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவேண்டும் என அரசை வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.

இச்செய்தியை கௌரவ முதலமைச்சர் அவர்கட்கு தெரியப்படுத்துமாறும் கோரியுள்ளார்கள். ஆகவே இக்கோரிக்கையை கௌரவ முதலமைச்சர் அவர்கள் ஏற்றுக்கொண்டு உரியநடவடிக்கை எடுக்கவேண்டும் எனஅன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

வடமாகாணசபை உறுப்பினர்
மயில்வாகனம் தியாகராசா

Thiyakarasa