சிறையில் தேனிலவு!!

366

Romantic-wedding-bedroom-decoration

சிறைக்­கை­தி­யொ­ருவர் சிறைச்­சா­லையில் வைத்து ஆடம்­பர திரு­மணம் செய்­த­துடன் அந்த சிறைச்­சாலை சிறைக்­கூ­டத்­தி­லேயே தேனி­லவைக் கொண்­டா­டிய விசித்­திர சம்­பவம் சவூதி அரே­பி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

இது தொடர்­பான தக­வல்­களை அந்­நாட்­டி­லி­ருந்து வெளி­வரும் சடா அல் பலாட் பத்­தி­ரி­கை வெளி­யிட்­டுள்­ளது.பாது­காப்பு சட்­டங்­களை மீறிய குற்­றச்­சாட்டில் கிழக்கு சவூதி அரே­பி­யா­வில் டம்மாம் நக­ரி­லுள்ள சிறைச்­சா­லையில் சிறைத்தண்­ட­னையை அனு­ப­வித்து வரும் பெயர் வெளி­யி­டப்­ப­டாத நபரே இவ்­வாறு திரு­மண பந்­தத்தில் இணைந்­துள்ளார்.

இந்த திரு­மண வைபவத்தில் அந்­நாட்டு உள்­துறை அமைச்­ச­ரான இள­வ­ர­ச­ரான மொஹமட் பின் நயெப் கலந்­து­கொண்டு புதி­தாக திரு­மண பந்­தத்தில் இணைந்து கொண்ட தம்­ப­திக்கு 1,760 ஸ்ரேலிங் பவுண் பெறு­ம­தி­யான பரிசை வழங்­கி­யி­ருந்­த­தாக மேற்­படி பத்­தி­ரிகை தெரி­விக்­கி­றது.

அந்த திரு­மண வைப­வத்தில் எடுக்­கப்­பட்ட புகைப்­ப­டங்­களும் இள­வ­ர­சரால் பரி­சாக வழங்­கப்­பட்ட காசோலைப் பிர­தியின் படங்­களும் குறிப்­பிட்ட அரேபிய மொழிப் பத்­தி­ரி­கையில் வெளி­யி­டப்­பட்­டுள்­ள­தாக பிரித்­தா­னிய டெயிலி மெயில் ஊடகம் குறிப்­பிட்­டுள்­ளது.

இந்தத் திரு­மண நிகழ்வில் மண­மக்­க­ளது உற­வி­னர்­களும் நண்­பர்­களும் கலந்து கொண்­டுள்­ளனர். திரு­ம­ணத்தில் கலந்து கொண்ட விருந்­தி­னர்­க­ளுக்கு சிறைச்­சாலைக் கூடத்­துக்­குள்ளே உணவும் குடி­யா­னங்­களும் பரி­மா­றப்­பட்­டுள்­ளன. தொடர்ந்து புது­மணத் தம்­பதி அந்த சிறைக்கூடத்திலேயே தேனிலவைக் கழித்துள்ளது.அந்த நபருக்கு எவ்வளவு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது என்பது தொடர்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.