சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி இன்று (வெள்ளிக்கிழமை) வவுனியா வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்தில் விசேட பூசைகளும் வேத, திருமுறை, பாராயணங்களும் இடம்பெற்றன.
எவ்வித விசாரணையோ, விடுதலையோ இன்றி வருடக்கணக்கில் தடுப்புக்காவலில் உள்ள அரசியல் கைதிகள் விடுதலையை வேண்டி இவ் வழிபாடுகள் இடம்பெற்றன.
வழிபாட்டில் கலந்து கொண்டவர்கள் நெய் விளக்கேற்றி வழிபட்டதைத் தொடர்ந்து சிவாச்சாரியார்களால் வேத பாராயணமும் அடியார்களால் திருமுறை ஓதுதலும் இடம் பெற்றது.
இவ் வழிபாட்டில் ஆலய குரு திவாகரகுருக்கள், கோவில்குளம் கிருஷ்ணன் கோவில் குரு மயூரன் சர்மா ஏனைய, சிவாச்சாரியர்கள் ஆலய செயலாளர் சி.கஜேந்திரகுமார் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நேற்று இந்து மாமன்றத்தால் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி விசேட பிரார்த்தனையில் ஈடுபடுமாறு கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.






