இரணைமடு குளத்தில் மூழ்கி ஒருவர் பலி!!

615

Kulam

இரணைமடு குளத்திற்கு குளிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நண்பர்களுடன் இன்று பகல் குளிப்பதற்காகச் சென்றவேளை நீரில் மூழ்கி காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது நீரில் மூழ்கியவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, அழகரத்னம் வீதியில் வசிக்கும் 36 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.