நடிகையுடன் யுவராஜ்சிங் இரகசிய நிச்சயதார்த்தம்!!

243

yuvi

இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு இருக்கும் 33 வயதான அதிரடி துடுப்பாட்ட வீரர் யுவராஜ்சிங், இங்கிலாந்து மாடல் அழகியும், ஹிந்தி நடிகையுமான 28 வயது ஹாசல் கீச்சை காதலித்து வருகிறார். இருவரும் அடிக்கடி ஒன்றாக சுற்றி திரிந்தாலும், தங்களது காதலை ஊடகங்களிடம் இருந்து மறைப்பதில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்கள்.

யுவராஜ்சிங், ஹாசல் கீச் திருமண நிச்சயதார்த்தம் நடக்க போவதாகவும், விரைவில் இருவரும் திருமண பந்தத்தில் இணைய இருப்பதாகவும் சமீபத்தில் செய்தி வெளியானது. இதனை மறுக்காமல் சமாளித்த யுவராஜ்சிங், தனது திருமண திகதியையும் ஊடக நண்பர்கள் அறிவித்து விட்டால், அதற்குள் நான் தயாராக வசதியாக இருக்கும் என்று கிண்டல் செய்து இருந்தார்.

இந்த நிலையில் யுவராஜ்சிங்-ஹாசல் கீச் திருமண நிச்சயதார்த்தம் இந்தோனேஷியாவில் உள்ள பாலியில் இரகசியமாக நடந்து இருக்கிறது என்றும், பெப்ரவரி மாதத்தில் திருமணம் நடக்க இருப்பதாகவும் தற்போது புதிய தகவல் கசிந்து இருக்கிறது.

இதனை உறுதி செய்வது போல் நடிகை ஹாசல் கீச்சின் இடது கைவிரலில் புதிதாக மோதிரம் ஒன்று ஜொலிப்பதை அவரது டுவிட்டர் பக்கத்தில் காண முடிகிறது.

இது குறித்து யுவராஜ்சிங்கின் தாயார் ஷப்னம் சிங் கருத்து தெரிவிக்கையில், ‘ஹாசல் கீச்சை, யுவராஜ்சிங்குக்கு கடந்த 3 ஆண்டுகளாக தெரியும். இருப்பினும் இருவரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருந்து தான் ஒன்றாக சுற்றி வருகிறார்கள்’ என்றார்.

யுவராஜ்சிங்கின் தந்தை யோக்ராஜ்சிங் கூறுகையில், ‘ஹாசல் கீச்சுக்கு, என்னை யுவராஜ்சிங் அறிமுகப்படுத்தினார். அவர் மிகவும் இனிமையான பெண்மணி. அவரை திருமணம் செய்வதால் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பும் அதிர்ஷ்டம் யுவராஜ்சிங்குக்கு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.

இந்திய அணிக்காக மீண்டும் யுவராஜ்சிங் நிச்சயம் விளையாடுவார். எனது கிரிக்கெட் வாழ்க்கையை என்னுடைய நண்பர் கபில்தேவ் சீரழித்தது போல, யுவராஜ்சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையை தலைவர் தோனி பாழாக்கினார்’ என்று தெரிவித்தார்.