பாரிஸ் தாக்குதலில் இலங்கையர்களுக்கு பாதிப்பு இல்லை : பாதுகாப்பை பலப்படுத்தியது சிங்கப்பூர்!!

290

பாரிஸில் இடம்பெற்ற தொடர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு அவதானத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளது.

பாரிஸில் இடம்பெற்ற தொடர் தாக்குதல் சம்வத்தில் 153க்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

இதில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என பாரிஸ் துதரகம் தெரிவித்துள்ளதுடன், மேலும் அந்த நாட்டு அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டடுள்ளது.

பாரிஸில் இடம்பெற்ற தாக்குதல்களை அடுத்து தமது பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக சிங்கப்பூர் அறிவித்துள்ளது.

சிங்கப்பூரின் உள்துறை அமைச்சர் கே சண்முகம் இதனை அறிவித்துள்ளார்.

பாரிஸ் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது அனுதாபங்களை வெளியிட்டுள்ள அவர், தமது நாட்டுக்கு வருவோர் தொடர்பில் சோதனை நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதல்களை அடுத்து எந்தவொரு நாடும் பாதுகாப்புக்களை பலப்படுத்தாமல் இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக சண்முகம் தெரிவித்துள்ளார்.

1 2 3 4 5