வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் : இலங்கைக்கு எச்சரிக்கை!!

552

Malai

வங்காளவிரிகுடாப் பகுதியில் கடந்த சில நாட்களாக காணப்பட்ட வளிமண்டல குழப்பமானது தற்போது தாழமுக்க வலயமாக மாறியுள்ளது.

இது தற்போது இலங்கையின் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற் பகுதியில் காணப்படுகிறது.

இதனால் நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதேவேளை இலங்கையை சுற்றிய கடற்பரப்பில் பலத்த காற்று வீசும் என்றும் வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

காங்கேசன்துறை தொடக்கம் மன்னார், கொழும்பு, காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணிக்கு 60கீ.மீ முதல் 70கீ.மீ வரையான வேகத்தில் வீசவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களில் இருந்து பொது மக்கள் தம்மை பாதுகாக்க முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்துகிறது.