பொலனறுவை வானில் மர்மமான ஒளி!!(காணொளி)

650

பொலனறுவை வானில் மர்மமான ஒளி ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது. சுமார் 40 நிமிடங்கள் வரையில் இந்த ஒளி நீடித்துள்ளதாகவும் இதனை மீனவர்கள் கண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நேற்றையதினம் WT1190கு என்ற மர்ம விண்பொருள் ஒன்று இலங்கையின் வான்பரப்பில் பிரவேசித்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

36 ஆயிரம் கிலோமீற்றர் வேகத்தில் விழுந்த குறித்த விண்பொருள், வளிமண்டலத்தில் காற்றுடன் உராய்வுக்கு உள்ளாகி தீப்பற்றி எரிந்து சிதறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நாசா உள்ளிட்ட விண்வெளி ஆய்வு மையங்கள் காட்சிப்படுத்தியுள்ளன.

இந்த விண்பொருள் தொடர்பிலான வீடியோ மற்றும் புகைப்பட தகவல்களை ஆய்வாளர்கள் திரட்டியுள்ளனர்.

இந்த விண்பொருள் வீழ்ந்தமை தொடர்பில் ஆய்வு நடாத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மர்மப் பொருள் விண்ணிலிருந்து விழும் காட்சி வெளிவந்துள்ளது.

20 21 22 23