பறந்து கொண்டிருந்த விமானத்தில் பெண் பயணி திடீர் தற்கொலை முயற்சி..

547

அமெரிக்காவில் இருந்து சீனா சென்ற விமானத்தில் பெண் பயணி ஒருவர் தற்கொலைக்கு முயன்றார். இதனால் விமானம் அவரசரமாக தரையிறக்கப்பட்டது.
அமெரிக்காவின் சிகாகோ விமான நிலையத்தில் இருந்து சீனாவின் தலைநகர் பீஜிங்குக்கு நேற்று முன்தினம் US 851 என்ற விமானம் புறப்பட்டது. நடுவானில் பறந்து கொண்டிருந்த போது கழிவறைக்கு சென்ற 40 வயது மதிக்கத்தக்க பெண் பயணி ஒருவர், நீண்ட நேரமாக வெளியில் வரவில்லை. கழிவறையில் அந்த பெண் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் விமான பணிப்பெண்களிடம் தெரிவித்தனர்.

இதுகுறித்து விமானிக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் விமானம் அவசரமாக அலாஸ்காவில் தரையிறக்கப்பட்டது. அங்கு தயாராக இருந்த போலீசார் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் கழிவறையில் இருந்து பெண்ணை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தில் வந்த மற்ற பயணிகள் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு வேறு விமானத்தில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர். தற்கொலைக்கு முயன்ற பெண் பயணியின் பெயர், அதற்கான காரணத்தை விமான நிறுவனம் தெரிவிக்கவில்லை.

பெண் பயணி விமானத்தில் எதற்காக தற்கொலைக்கு முயன்றார் என்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். விமானத்தில் பயணம் செய்த பயணிகள் சிலர் சமூக இணையதளத்தில், தங்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியான அனுபவத்தை விரிவாக எழுதி உள்ளனர்.