வவுனியா CCTMS பாடசாலைக்கு உதவிய வடமாகாணசபை உருப்பினர்களுக்கு பாடசாலை சமூகம் நன்றி தெரிவிப்பு!!

819

image2

வவுனியா CCTMS பாடசாலையின் விஞ்ஞான ஆய்வுகூட மேம்பாட்டிற்கு வடமாகாணசபை உறுப்பினர்களான திரு இ.இந்திரராசா அவர்களினால் 75000 பெறுமதியான கண்ணாடி கபினற் ஒன்றும் திரு.ம.தியாகராசாஅவர்களினால்75000 பெருமதியான பல்லூடக எறியி என்பனவும் திரு.ஜி.ரி.லிங்கநாதன் அவர்களினால் 50000 பெறுமதியான தொலைக்காட்சிப்பெட்டி மற்றும் DVD பிளேயரும் வழங்கியிருந்தார்கள்.

மேலும் தரம் 5 புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவி கவின்நிலாவின் பெற்றோர் 14000 பெறுமதியான முதலுதவிப் பெட்டியினையும் white board 3 இனையும் வழங்கியிருந்தார்கள்.

பாடசாலை நிர்வாகம் 30000 மற்றும் கணனி ஒன்றினையும் நூலக ஆசிரியர் திருமதி யோகராஜா 1000 ரூபாவினையும் வழங்கியிருந்தார்கள்.

கடந்த 6.11.2015 இல் நடைபெற்ற விஞ்ஞானதின விழாவில் கலந்து சிறப்பித்த அதிபர் பஸ்தியாம்பிள்ளை, வடமாகாணசபை உறுப்பினர்களான திரு.இ.இந்திராசா, திரு ஜி.ரி.லிங்கநாதன், திரு.ம.தியாகராசா, திரு.M.P.நடராஜ் மற்றும் தெற்கு வலய விஞ்ஞான உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு இ.இந்திரலிங்கம், விஞ்ஞான ஆசிரிய ஆலோசகர் திரு.இ.மாதவன் மற்றும் ஆசிரியர், மாணவர், பெற்றோர், விஞ்ஞான தினத்தை சிறப்புற நடாத்த உதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்

விஞ்ஞான ஆசிரியர்கள் க்கத்ம்ஸ்