இசை நிகழ்ச்சியின் போது ஒருவர் அடித்துக் கொலை!!

560

Murder

அவிசாவளை பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை சீதாவக பகுதி மைதானம் ஒன்றில் வைத்தே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது காயமடைந்த அவிசாவளை பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பலியாகியுள்ளார்.

சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.