வவுனியாவில் கடும் மழை காரணமாக 202 பேர் பாதிப்பு!!

524

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் 62 குடும்பங்களைச் சேர்ந்த 202 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

கடும் மழை காரணமாக தாழ் நிலப் பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வவுனியா பிரதேச செயலகர் பிரிவில் உள்ள ஆசிகுளத்தில் 02 வீடுகள் முழுமையாக பாதிப்படைந்துள்ளது. இங்கு வசித்து வந்த 9 பேரும் வேறு ஒரு இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், வவுனியா வடக்கு பிரதேச செயலகர் பரிவில் 60 குடும்பங்களைச் சேர்ந்த 193 பேர் பாதிப்படைந்துள்ளனர். இவர்களது 60 வீடுகளும் பகுதியளவு சேதமடைந்துள்ளது.

இதுதவிர, புளியங்குளம், பழையவாடி குளம் உடைப்பெடுத்துள்ளது. அதனை அப்பகுதி கமக்கார அமைப்பின் உதவியுடன் உரைப்பைகளில் மண்போட்டு அடைக்கும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது எனவும் அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

1 2 3 4 6 8