வெள்ளத்தினால் வீட்டிற்குள் வந்த முதலை!!

657

யாழ்ப்பாணத்தில் வெள்ளப் பெருக்குக் காரணமாக முதலை ஒன்று வீட்டிற்குள் புகுந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று நிகழ்ந்துள்ளது.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக யாழ். தென்மராட்சி இராமவில் பகுதியில் முதலையொன்று ஒரு வீட்டினுள் புகுந்ததாக அந்த வீட்டு நபர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் அந்த முதலையை விரட்ட குடும்பத்தவர்கள் முயற்சித்த போது, அது அருகில் இருந்த கிணற்றில் பாய்ந்துள்ளது.

இதனையடுத்து, முதலையை பிடிக்க பொலிஸாரும் வனஜுவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்கள் ஆகியோர் முயற்சித்துள்ளனர்.

1 2 3