
சிரியாவில் இருக்கும் முக்கிய ஐ.எஸ். நிலைகள் மீது பிரான்ஸ் அதிரடி தாக்குதல் நடத்திவருவதாக அந்நாட்டு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 14ம் திகதி நள்ளிரவு பாரிஸில் உள்ள கலையரங்கம், உணவு விடுதி, கால்பந்து மைதானத்தை அண்டிய பகுதி என ஆறு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 150க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது.
இந்நிலையில் பாரிஸில் நடத்தபப்ட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிரியாவில் இருக்கும் முக்கிய ஐ.எஸ். நிலைகள் மீது பிரான்ஸ் போர் விமானங்கள் குண்டு வீசி அதிரடி தாக்குதல் நடத்திவருவதாக அந்நாட்டு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





