
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாதம் 27ஆம் திகதி வெளியிடப்படும் என இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நடைபெற்ற இந்தப் பரீட்சை 2,180 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றதுடன் இந்த பரீட்சையில் 309,069 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர்.
பரீட்சார்த்திகள் தமது பெறுபேறுகளை www.doenets.lk (link is external) மற்றும் www.exams.gov.lk (link is external)ஆகிய இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





