ருபெல்லா’ என்பது மூளை வளர்ச்சியைப் பாதிக்கக்கூடிய ஒரு வகை வைரஸ். பெண் குழந்தை பிறந்த 15-வது மாதத்திலேயே, அதற்கு ‘ருபெல்லா வேக்சினேஷன்’ எனப்படும் தடுப்பு ஊசி போட வேண்டும். அதே போல் அவளுடைய 15-வது வயதில் மீண்டும் அதே தடுப்பு ஊசி போட வேண்டும்.
இது அந்தக் குழந்தையின் உடலில் ருபெல்லாவை எதிர்ப்பதற்கான சக்தியைக் கொடுக்கும். பின்னாளில் அவள் பெரியவளாகி கர்ப்பம் தரிக்கும்போது, அந்தக் கருவின் மூளை வளர்ச்சி நல்ல படியாக இருப்பதற்குத்தான் இத்தனை முன்னேற்பாடு!
இலங்கையில் இந்த ருபெல்லா தடுப்பூசி கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கிறது . இப்படிப் பெண் குழந்தைகளுக்காக ஒரு ஸ்பெஷல் தடுப்பூசி இருப்பதே நம்மில் பலருக்குத் தெரியாது. ருபெல்லா வைரஸால் பாதிக்கப்படுகிற குழந்தையின் தலை சின்னதாக இருக்க வாய்ப்புகள் அதிகம். கண் பார்வை குறையலாம்.
ருபெல்லா விழிப்புணர்வு
ருபெல்லா என்பது சிறுவர்களுக்கும் மட்டுமில்லாமல் இளையோருக்கும் ஏற்படும் பரவுவதற்கு வாய்ப்புள்ள வைரஸ் தொற்று ஆகும். ருபெல்லா வைரஸ் மனிதர்களின் மூச்சு இருமல் மூலமாக மட்டும் பரவக்கூடிய வைரஸ் ஆகும்.
நோய்க்கான அறிகுறிகள்:
குழந்தைகளுக்கு முகம் கழுத்தில் தொடங்கி உடல் முழுதும் வேர்க்குரு போன்ற தடுமன் (rashes) தோன்றும். லேசான காய்ச்சல் இருக்கும். முதல் 5 நாட்களுக்கு வெகுவான பாதிப்பைத் தரும் இத்தடுமன் 10 நாட்களில் மறையும்.
இளையோர்களில் பெரும்பாலும் பெண்களுக்கே இதன் பாதிப்பு வரக்கூடும். குறிப்பாகக் கர்ப்பக்காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் ருபெல்லா வைரஸ் தொற்று பெரும் பாதிப்பினை ஏற்படுத்துவதாக அமையும். கருவுற்ற இளம் பெண்களால் வயிற்றிலிருக்கும் குழந்தைகளுக்கு 90% வைரஸ் பரவும் ஆபத்து உண்டு.
கருவுற்ற தாய்மார்களுக்கு இத்தொற்று ஏற்படுமானால் கருச்சிதைவோ அல்லது குழந்தையின் மூளைக்குப் பாதிப்பையோ ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. இதனை congenital rubella syndrome (CRS) என்று ஆங்கிலத்தில் அழைக்கின்றனர். ஒவ்வோர் ஆண்டும் உலகளவில் 1,10,000 குழந்தைகள் congenital rubella syndrome (CRS) பாதிப்புடன் பிறக்கின்றன. ருபெல்லாவிற்கு குறிப்பிட்ட சிகிச்சைகள் என்று ஏதுமில்லை. ஆனால் வருமுன்னர் தடுப்பது முடியும்.
ருபெல்லாவிற்கான தடுப்பு மருந்துகளைத் தனியாகவோ பிற தடுப்பு மருந்துகளுடன் இணைத்தோ வழங்கும் முறை நம் நாட்டில் அமலில் இருக்கிறது. பொதுவாக நம் பகுதிகளில் MMR தடுப்பு ஊசிகள் குழந்தைகளில் 15 ஆம் மாதத்தில் போடப்படுகின்றன. MEASELS – MUMPS – RUBELLA என்பதன் சுருக்கவடிவமே MMR ஆகும். பெண் குழந்தைகளுக்கு அவர்களின் 15 ஆம் வயதிலும் இத்தடுப்பூசி போடுவது அவசியமாகும். இதனால் பெண் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும் போது கர்ப்ப காலத்தில் ருபெல்லா தொற்றிலிருந்து தடுக்கப்படும் வாய்ப்பு ஏற்படுகிறது.
ருபெல்லா வைராஸால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வசம்பு குடிநீர் தயாரித்து தொடர்ந்து குடிக்க சரியாகும்.
நம் நாட்டு சித்த மருத்துவத்தில் குழந்தைகளுக்கு வசம்பு உபயோகப்படுத்துவது பரவலாக இருந்தது. இப்பொழுது குழந்தைகளுக்கு வசம்பு உபயோகிப்பது குறைந்துவிட்டது. இதை சரியான அளவில் எவ்வாறு உபயோகிப்பது என்ற அறியாமையே.
ஞாபக சக்தியை அதிகரிக்கும் வசம்பு
பல்வேறு மருத்துவ குணங்களை உடைய வசம்பு குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுவலியை குணமாக்க கூடியது.
வசம்புவுக்கு ‘பிள்ளை வளர்த்தி’ என்ற பெயர் உண்டு, இது பசியின்மையை போக்க கூடியது.
வசம்புவை விளக்கெண்ணெயில் துவைத்து, விளக்கில் கரித்து, பொடியாக்கி பாலில் இழைத்து குழந்தையின் நாவில் தடவும் வழக்கம் இருந்து வருகிறது. இவ்வாறு செய்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலி சரியாகும். ஞாபக சக்தி கூடும்.
நரம்பு மண்டலங்களை தூண்டக் கூடிய வசம்பானது வலியை போக்கவல்லது, பதட்டத்தை தணிக்க கூடியது.
இதய ஓட்டத்தை சீர் செய்யும். சிறுநீரக கோளாறை போக்கும், ரத்தத்தை சுத்தப்படும்.
குழந்தைக்கு வயிற்று வலி இருக்கும்போது வசம்பை கரியாக்கி விளக்கெண்ணெய் சேர்த்து தொப்புளை சுற்றி பத்தாக போடும்போது குழந்தைகள் அழுவதை நிறுத்தும்.
உரைப்பான் என கிராமத்தில் அழைக்க கூடிய வசம்பை கொண்டு நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும் டானிக் தயாரிக்கலாம். ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும். அதில் வசம்பு துண்டை, 3 அல்லது 4 மணி நேரம் ஊரவைக்க வேண்டும். பின்னர், வசம்பை எடுத்துவிட்டு, வெந்நீரில் ஒரு ஸ்பூன் தேன் சேர்க்க வேண்டும்.இதை குடிப்பதால் மன உளைச்சல் மறைந்து போகிறது. மூளைக்கு இதமான சுகத்தை கொடுக்கிறது. ஞாப சக்தியை அதிகப்படுத்தும். வயிற்று கோளாறு, பேதி, வயிற்றுபோக்கு சரியாகும்.
வசம்புவை அதிகமாக எடுத்துக் கொள்ள கூடாது. அதிகமாக சாப்பிடும்போது வாந்தியை உண்டாக்க கூடியது. எனவே, 350 மில்லி கிராமுக்கு மிகாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். வசம்புவிற்கு மாங்கல்யா என்ற வடமொழி பெயர் உண்டு. விட்டுவிட்டு வரும் வலியை வசம்பு குறைக்கும். அழுகிற குழந்தைகளுக்கு வசம்பு நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மருந்தாகிறது. பக்கவாதத்தை போக்கும் தன்மை கொண்டது.
வசம்பை பயன்படுத்தி இருமல், சளி, அல்சருக்கான மருந்து தயாரிக்கலாம். கால் ஸ்பூன் வசம்பு பொடி, அரை ஸ்பூன் அதிமதுர பொடி, ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டுடன், தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து தேனீராக பருகலாம். இந்த தேனீர் ருபெல்லா வைரஸால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கும் நல்ல குணம் தரும்.
இது வாயு பிரச்னையை சரிசெய்யும். குடலில் உள்ள புண்களை ஆற்றும், இருமலை தணிக்கிறது, சளியை கரைக்க கூடியது.
வயிற்று போக்கு இருந்தால் பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும். அதனுடன், அரை முதல் ஒரு கிராம் வசம்பு பொடி, சம அளவு சுக்கு பொடி, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
அதை வடிகட்டிய பின் காய்ச்சிய பால் சேர்க்கவும். இதை குடிப்பதன் மூலம் வாயு பிரச்னை சரியாகும்.
ஆயுர்வேதத்திலும் வசம்பு ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.