
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையின் தாக்கத்தால் வவுனியா மாவட்டத்தில் 348 குடும்பங்களைச் சேர்ந்த 1229 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை காரணமாக தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டமையால் வவுனியா மாவட்டத்திலும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
வவுனியாவில் 181 குடும்பங்களைச் சேர்ந்த 643 பேரும், வவுனியா வடக்கில் 166 குடும்பங்களைச் சேர்ந்த 581 பேரும், வவுனியா தெற்கில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருமாக 348 குடும்பங்களைச் சேர்ந்த 1229 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
வவுனியாவில் முழுயாக 2 வீடுகளும், பகுதியளவில் 10 வீடுகளும், வவுனியா வடக்கில் முழுமையாக 3 வீடுகளும், பகுதியளவில் 132 வீடுகளும், வவுனியா தெற்கில் பகுதியளவில் ஒரு வீடும் ஆக 148 வீடுகள் பாதிப்படைந்துள்ளன.
கனகராயன்குளம் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் நலன்புரி நிலையம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.





