அவுஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜோன்சன் ஓய்வு!!

252

johnson_002அவுஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்சேல் ஜான்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.34 வயதான ஜான்சன், 73 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அவர் வீழ்த்திய ஒரு விக்கெட்டை சேர்த்து டெஸ்டுகளில் மொத்தம் 311 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

இதன்மூலம், ஷேன் வார்னே-708, மெக்ராத்-563, டென்னிஸ் லில்லி-355 ஆகியோருக்கு அடுத்தபடியாக, அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஜான்சன் பெற்றுள்ளார்.

இதுகுறித்து ஜான்சன் கூறுகையில், பெர்த் நகரில் எனது ஓய்வை அறிவிப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. நீண்ட நாட்கள் யோசித்துதான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.