வியாபாரமாகும் வடிவேலு வசனம்: வருத்தத்தில் வைகைப்புயல்!!

475

maxresdefault

தமிழ் சினிமாவில் யாரும் அசைக்க முடியாத காமெடியனாக வலம் வந்தவர் வடிவேலு.ஆனால் அவரின் சில தவறான முடிவால் சினிமாவில் சில காலம் ஒதுங்கி இருந்து தற்போது பெரியளவில் ஜொலிக்க முடியாமல் இருக்கிறார்.ஆனால் இன்றும் இவரின் காமெடி தான் சின்னத்திரையை ஆக்கிரமித்து வருகின்றன.

மேலும் இவரின் நானும் ரவுடிதான், த்ரிஷா இல்லனா நயன்தாரா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற பிரபலமான வசனங்களை தலைப்பாக வைத்து வெளிவரும் திரைப்படங்கள் பட்டைய கிளப்புகின்றன.தொடர்ந்து ஜில் ஜங் ஜக், சண்டைனா சட்டை கிழியத்தானே செய்யும் போன்ற வசனமும் படங்களாக தயாராகி வருகின்றன.ஆனால் இந்த வசனங்களுக்கு சிலர் மட்டுமே அனுமதி வாங்கி விற்பனை செய்கிறார்களாம். மற்றவர்கள் அனுமதியின்றி தான் வசனத்தை தலைப்பாக வைக்கின்றனர் என்று வருத்தம் தெரிவித்துள்ளார் வைகைப்புயல்.