4 ஆண்டுகளுக்கு பின்பு வீடு திரும்பிய கிளி!!

616

hqdefaultஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த டேரன் சிக் என்பவர் தனது வீட்டில் ஆப்பிரிக்க நாட்டு சாம்பல்நிற கிளியை செல்லமாக வளர்த்து வந்தார். அந்த கிளிக்கு அவர் ஒரு சில ஆங்கில வார்த்தைகளையும் பேச கற்றுக்கொடுத்து இருந்தார். 4 ஆண்டுகளுக்கு முன்பு அந்த கிளி திடீரென மாயமாகிவிட்டது. அதை கண்டுபிடிக்க டேரன் சிக் எடுத்த முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.

அதன்பிறகு அந்த கிளியைப் பற்றி அவர் மறந்தே போனார். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு அந்த கிளி மீண்டும் அவரது வீட்டுக்கு வந்து சேர்ந்தது. இதனால் அவர் மிகுந்த சந்தோஷமடைந்தார். அதை விட மிகுந்த ஆச்சரியமாக அந்த கிளி தான் கற்று கொண்டிருந்த ஆங்கில வார்த்தைகளை மறந்து ஸ்பானிஷ் மொழியில் சில வார்த்தைகளைப் பேசி அசத்தியது. குறிப்பாக லேரி எங்கே? என்று ஸ்பானிஷ் மொழியில் அவரிடம் கேட்டது.