
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட் வீரரும் காலி சர்வதேச மைதானத்தின் தலைமைப் பொறுப்பாளருமான ஜயனந்த வர்ணவீர, நடத்தை சரியின்மையால் கிரிக்கெட் சபையின் செயற்பாடுகளில் இருந்து இரண்டு வருடங்களுக்கு பணிநீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
விசாரணைக்கு சமுகமளிக்குமாறு ஐ.சி.சி. யின் ஊழல் பிரிவு, ஜயனந்த வர்ணவீரவுக்கு இரு முறை அழைப்பு விடுத்துள்ளது.
குறித்த அழைப்பை வர்ணவீர உதாசீனம் செய்து விசாரணைக்கு ஒத்துழைக்காமையால் அவரை இரு வருடங்களுக்கு பணிநீக்கம் செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.





