வவுனியாவில் பொது அமைப்புக்களுக்கு வடமாகாண சபை உறுப்பினரால் உதவி!!

621

வடமாகாணசபை உறுப்பினர் திரு. மயில்வாகனம் தியாகராசா அவர்கள் தனக்கு குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் நிதியிலிருந்து வவுனியா மாவட்டத்தில் 2015ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட கிராமங்களின் 24 பொது அமைப்புக்களுக்கும் மொத்தமாக ஒதுக்கப்பட்டு கொள்வனவு செய்யப்பட்ட 1224 பிளஸ்ரிக் கதிரைகளை வழங்கினார்.

இன் நிகழ்வானது வடமாகாணசபை உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றபோது வடமாகாணசபை உறுப்பினர் திரு.மயில்வாகனம்.தியாகராசா அவர்கள் பிளஸ்ரிக் கதிரைகளை பொது அமைப்புக்களின் தலைவர் செயலாளர்களிடம் வழங்கினார்.

இன் நிகழ்வில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தித் திணைக்கள அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் அங்கத்தவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டர்கள்.

IMG_6573 IMG_6576 IMG_6581