டுபாயிலிருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்களை சுங்க அதிகாரிகள் கிராண்ட்பாஸ் பகுதியில் வைத்து கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட சிகரெட்டுக்களின் பெறுமதி 35 கோடி ரூபா என சுங்க அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.சந்தேகத்திற்கிடமான கொள்கலன் ஒன்றை சோதனையிட்டபோதே குறித்த சிகரெட்டு தொகை மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுங்க அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





